Search This Blog

Monday, March 15, 2010

துங்கு பைனுன் ஆசிரியர்பயிற்சி கல்லூரி மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்வு

ஒன்று கூடும் நிகழ்வு
கணேஷ் & ஆறுமுகம்

செல்வி, மலர், அன்பரசி,
பிளோர & பிரேமா

Friday, March 12, 2010

வருவது வரட்டும்

வந்த துன்பம்
எதுவானாலும்
வரட்டும் ! வரட்டும் ! வரட்டும்!
வந்து துணிவை
மனதில் நாலும்
தரட்டும்! தரட்டும்! தரட்டும் !

துணிவே நம்மில்
சோம்பல் குணத்தை
விரட்டும்! விரட்டும்! விரட்டும்!
துன்பம் நமக்கு
பாடம் என்றும்
புகட்டும்! புகட்டும் ! புகட்டும்!

செயல்கள் சிறப்புற
செய்தல் வேண்டும்
திட்டம்! திட்டம்! திட்டம்!
வெற்றிக் கனிகள்
அதனால் நமக்கு
கிட்டும்! கிட்டும்! கிட்டும்!

உனக்கு நீயே
போடா வேண்டும்
சட்டம்! சட்டம்! சட்டம்!
உனது புகழோ
ஒருநாள் விண்ணை
முட்டும்! முட்டும்! முட்டும்!

ஆக்கம் : கணேஷ் இராமசாமி

நான் ரசித்த பாடல்

நல்லவர் சொல்லை நாம் கேட்போம் ,

நலமாய் வாழ வழி வகுப்போம்

தலைவர்கள் சொன்ன வழி நடப்போம்

தாய் நாட்டினையே வாழ வைப்போம்.....

புதியவனுக்கு வழிகாட்டுங்கள்


அன்புசால் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள் உரித்தாகுக. இந்த புதிய வலைபதிவின் வாயிலாக அனைத்து தமிழாசிரியர்களையும் இணைக்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும். இது எனது முதல் முயற்சி என்பதால் இதில் பல குறைகள் தென்படலாம். ஆகவே எமது குறைகளை சுட்டி எனக்கு வழிகாட்ட வேண்டியது உங்களின் பொறுப்பாகும். நிற்க.. எனது பதிவுகள் தொடரும்.
அன்னைத் தமிழே...! அன்பின் முகவரி...!