இந்திய வர்க்கத் தோழனே
இழிவை போக்கிட எழுந்திடு பிந்திய இனத்தை முந்தியே போய்விட நீயே விழித்திடு
நிந்தை களைந்து நீயுமே நேர்மை யுடன் உழைத்திடு கந்தை யகற்றி நாளுமே கருணை யுருவாய் நின்றிடு
தரணியில் என்றும் தோழனே தமிழ் மகனாக வாழ்ந்திடு தரமும் உயர தமிழனே திறமை கொண்டு ஏறிடு
முயற்சி இன்றி முடியாது முயல வேண்டும் தளராது அயர்ச்சி என்றும் கூடாது அறிய வெற்றி பெறுதற்கு
No comments:
Post a Comment